








.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
It is an organization to protect human life and health based India. It gives relief in times of disasters emergencies and promotes health & care at vulnerable people
It is advised that each college shall have college level advisory committee consisting of
Department of Computer Applications
Srinivasan College of Arts & Science
Perambalur.
Department of Commerce
Srinivasan College of Arts & Science
Perambalur.
YRC Student Chairman : S.KARTHIKEYAN (III BCA)
YRC Student Secretary : R.RAJALAKSHMI (III PHYSICS)
Indian Red Cross Society Celebrated 65th & 66th Anniversary Geneva conventions on March 16th 2016 At Bharathidasan University Dr.V.M.Muthukumar Vice-Chancellor of Bharathidasan University conferred an Appreciation Certificate to our YRC Programme Officer Prof.M.G.SARAVANAN of Department of Computer Applications Srinivasan College of arts & science for recognizing his service. We also appreciate him and wish him to render his duties
சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (13.09.17) இளம் செஞ்சிலுவைச் சங்க துவக்கவிழா மற்றும் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தனலெட்சுமி சீனிவாசன் குழுமங்களின் நிறுவனத் தலைவர் உயர்திரு, அ.சீனிவாசன் ஐயா அவர்கள் தலைமை வகித்தார். இவ்விழாவில் பெரம்பலூர் மாவட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்க செயலாளர் உயர் திரு நா.ஜெயராமன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகெண்டு பதவி நியமனம் செய்து வைத்தார் முன்றாம் ஆண்டு கணினி பயன்பாட்டியல் துறையைச் சார்ந்த மாணவன் ச.கார்த்திகேயன் தலைவராகவும் முன்றாம் ஆண்டு இயற்பியல் துறையைச் சார்ந்த மாணவி ர.ராஜலெட்சுமியை செயலாளராகவும் பணியேற்றார்கள்.
சிறப்பு விருந்தினர் திரு.நா.ஜெயராமன் அவர்கள் மாணவ மாணவிகளிடம் உறையாற்றும் போது “இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் தோற்றம் நோக்கம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விரிவாகப் பேசினார். இந்த செஞ்சிலுவைச் சங்கம் முதன் முதலாக ஹென்றி டொனால்ட் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. உலக அளவில் எல்லா நாடுகளிலும் இந்த சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்தியாவில் இதன் தேசிய தலைமையிடமாக டெல்லியும் மாநிலத் தலைமையிடமாக அந்தந்த மாநிலத் தலைநகரில் கவர்னர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்பட்டு வருகின்றது. குறிப்பாக இந்த சங்கத்தின் வாயிலாக உடல்நலம் சுகாதாரம் பேரிடர் மீட்பு போன்ற பணிகளை செய்து வருகின்றனர். மேலும் மருத்துவமனைகளில் ரத்தக் கொடையாளர்களை ஒருங்கிணைப்பது இலவச அமரர் ஊர்தி சேவை ஆம்புலன்ஸ் சேவை போன்றவைகளை இந்த சங்கத்தின் முலம் செய்து வருகின்றனர். மேலும் உடல்நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு முகாம்களையும் பயிற்சிகளையும் செய்து வருகின்றனா”;. மேலும் இவ்விழாவில் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் நா.வெற்றிவேலன் அவர்களும் துனைமுதல்வர் பேராசிரியர் கோ.ரவி அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்.
இவ்விழாவினை இளம் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் பேரா. ஆ.பு.சரவணன் பேரா.ச.ஆனந்தி நடத்தினார். இவ்விழாவிற்கு வருகைபுரிந்த அணைவரையும் முன்றாமாண்டு கணினி பயன்பாட்டியல் துறை மாணவன் செ.அரவிந்தன் வரவேற்று வரவேற்புறை வழ்ஙகினார். நிறைவாக முன்றாமாண்டு இயற்பில் துறை மாணவி ர.ராஜலெட்சுமி நன்றியுறை வழங்கினார்.
சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உயிர்த்தொழில்நுட்பவியல் மற்றும் நுண்ணுயிரியல் துறை நாட்டுநலப் பணித்திட்டம் ரோட்டரி சங்கம் இளம் செஞ்சிலுவைச் சங்கம் சார்பாக இரத்தவகை கண்டறியும் முகாம் 08.09.2017 அன்று காலை 10 மணியளவில் நுண்ணுயிரியல் துறை ஆய்வகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தனலெட்சுமி சீனிவாசன் குழுமங்களின் நிறுவனத் தலைவர் உயர்திரு அ.சீனிவாசன் ஐயா அவர்கள் தலைமை வகித்தார். முகாமிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் நா.வெற்றிவேலன் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பார்மஸி கல்லூரி முதல்வர் முனைவர் தயாபரண் மற்றும் துணை முதல்வர் பேரா. கோ.ரவி அவர்களும் அனைத்துத் துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இம்முகாமில் 1000க்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள் கலந்து கெண்டு தங்கள் இரத்தவகை கண்டறியும் பரிசோதனை செய்து கெண்டார்கள். முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ரோட்டரி சங்க ஒருங்கிணைப்பாளர்கள் இளம் சங்க ஒருங்கினைப்பாளர்கள் உயிர்த் தொழில்நுட்பவியல் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் செய்திருந்தனர்.
சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் செஞ்சிலுவை சங்கம் இன்று (08.09.16) துவங்கப்பட்டது. தொடக்க விழாவில் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் நிறுவனத் தலைவர் உயர்திரு. சீனிவாசன் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ரோட்டாரியன் வழக்கறிஞர் பாபு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் இளம் செஞ்சிலுவை சங்கத்தின் மாணவ நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சங்கத்தில் செயல்திட்டங்கள் விளக்கப்பட்டது.
சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம்(YRC) சார்பாக உலக பேரழிவு தின விழா 20.10.2015 அன்று காலை 10.30 மணியளவில் கல்லூரி கலையரங்கத்தில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் பெ.செந்தில்நாதன் தலைமை தாங்கினார். மூன்றாமாண்டு வணிக மேலாண்மையியல் மாணவி பிரேமா வரவேற்புரை வழங்கினார். கல்லூரி ஒருங்கிணைப்பாளர் பேரா. கோ.ரவி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் ப.செந்தில்நாதன் அவர்கள் கலந்துகொண்டு உலகில் ஏற்படும் இயற்கைப் பேரழிவுகள் குறித்தும் அதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பாக மீள்வது குறித்தும் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அனைத்துத் துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவின் நிறைவாக மூன்றாமாண்டு வணிகவியல் மாணவர் பிரபு நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சிலுவைச் சங்க(YRC) ஒருங்கிணைப்பாளர்கள் நு.கிருத்திகா, ஆ.பு.சரவணன், யு.பக்ருதீன் அலி அகமது மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாணவ மாணவிகள் செய்திருந்தனர்.